பிரபல நடன இயக்குநர் ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தமிழ்ப் படங்களில் நாயகியாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடனம் அமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார். எனினும் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் 'யாதுமாகி நின்றாய்' என்ற படத்தை இயக்கப் போகிறார். படத்தின் தயாரிப் பாளர் கிரிஜா ரகுராம். கதாநாயகனாக நடிக்கும் வசந்த் என்பவர் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். அஸ் வின் விநாயகமூர்த்தி இசையில், கபிலன், அச்சு இருவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
'யாதுமாகி நின்றாய்' படத்தின் ஒரு காட்சியில் வசந்த், காயத்ரி ரகுராம்.