ப. பாலசுப்பிரமணியம்
தொழில்நுட்ப மாற்றங்களுடன் போட்டித்தன்மையும் அதிகரித்து வரும் வேளையில் சிறிய, நடுத்தர நிறு வனங்கள் தங்களது திறன்களை மேம்படுத்துவது முக்கியமாகிறது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ். ஈஸ்வரன் கூறியுள்ளார். வசந்தம் ஒளிவழியில் நேற்று முன்தினம் ஒளிப்பரப்பான 'வரவு செலவுத் திட்டம் 2017 கலந்துரையாடல்' நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கலந்துரையாடலில் வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள் எவ்வாறு சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உதவும் என்பது குறித்தும் பேசப்பட்டது.