அரசு, கடந்த ஆண்டு விலங்குகளை நிர்வகிப்பதற்காக 800 மில்லியன் வெள்ளி செலவழித்தது என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், விலங்குகளைக் கொல்வதற்கான செலவுகளும் இதில் உள்ளடக்கும் என்றார். "சிறிய தொகை மட்டுமே விலங்குகளை அழிப்பதற்கு செல வழிக்கப்பட்டது. இதனால் இதற்கு ஆகும் செலவுகளை ஆணையம் கணக்கில் கொள்வதில்லை," என்று அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் பேசிய நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லுயிஸ் இங், விலங்குகளைக் கொல்வதற்கான செலவுகள் குறித்து கேள்வி எழுப்பினார். மூன்று ஆண்டுகளில் இந்தச் செலவு அதிகரிக்குமா என்றும் அவர் கேட்டார்.
சுகாதார காரணங்களுக்காகவே விலங்குகள் அழிக்கப்படுகின்றன என்று நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ சொன்னார். கடந்த வாரம் சின் மிங்கில் கோழிகள் கொல்லப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவர் பதில் அளித்தார். கோப்புப் படம்