வடகொரிய தலைவரின் ஒன்று விட்ட சகோதரர் என்று கூறப்படும் கிம் ஜோங் நாம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு வெளிநாட்டுப் பெண்கள் மீதும் இன்று மலேசி யாவின் செப்பாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட இருப்பதாக அந்நாட்டின் தலைமைச் சட்ட அதி காரி அபாண்டி அலி தெரிவித்து உள்ளார். குற்றத் தண்டனைச் சட்டப் பிரிவு 302ன் கீழ் கொலைக்குற்றம் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளுக்கு அனுப்பிய குறுந் தகவலில் அவர் கூறியுள்ளார். வியட்னாமைச் சேர்ந்த டோவன் தி ஹுவோங், 29, இந்தோனீசியா வின் சித்தி ஆயிஷ்யா, 25, ஆகி யோரே குற்றம் சாட்டப்பட இருக் கும் பெண்கள். கடந்த மாதம் 13ஆம் தேதி கிம் ஜோங் நாம் கொலை செய்யப்பட்ட ஒருசில நாட்களில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
கொலைக் குற்றம் எதிர்நோக்கும் வியட்னாமையும் இந்தோனீசியாவையும் சேர்ந்த பெண்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ்