‘ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட ரூ.65 லட்சம்’

'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கேத்தரின் தெரசா, குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாட ரூ.65 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்துள்ள 'கடம்பன்' படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அத்துடன் விஷ்ணு விஷால் ஜோடியாக 'கதாநாய கன்' படத்திலும் தெலுங்கில் 'நேனே ராஜு நேனே மந்த்ரி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரே‌ஷின் மகன் ஸ்ரீநிவாஸ் நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அதேபோல் பொய்யப்பட்டி சீனு இயக்கத்தில், ஸ்ரீநிவாஸ் நடிக்கும் பெயரிப்படாத படத்தில் குத்துப்பாட்டு ஒன்றுக்கு கேத்தரின் தெரசா நடனமாடுகிறார். இந்த ஒரு பாடலுக்கு மட்டும் கேத்தரின் தெரசாவின் சம்பளம் ரூ.65 லட்சம் என்று கூறப்படு கிறது. இது தெலுங்குப் பட உலகினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!