தமது வகுப்பைச் சேர்ந்த மாண வனின் குறும்புச் செயலின் காரணமாகத் தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமையன்று அந்த மாணவன், சிறுமியின் தண்ணீர்ப் புட்டிக்குள் இருந்த தண்ணீரில் அவளுக்குத் தெரியாமல் சோப்புத் திரவத்தைக் கலந்ததாகக் கூறப்படுகிறது. சோப்புத் திரவம் கலந்த தண்ணீரைக் குடித்த சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவள் பலமுறை வாந்தி எடுத்ததாக வான்பாவ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி. படம்: வான்பாவ்