கொதிக்க கொதிக்க கணவர் மீது வெந்நீரை ஊற்றிய பெண்

கிருஷ்ணகிரி: கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்டு வந்த குடும்பத் தகராற்றால் ஆத்திரமடைந்த மனைவி, கணவன் மீது வெந்நீரை எடுத்து ஊற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. குருபரப்பள்ளி அருகே உள்ள பாஞ்சாலிநகரைச் சேர்ந்தவர் பழனி (45) முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி மலர்க்கொடி(34). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். கடந்த ஞாயிறன்று இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மலர்க்கொடி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை எடுத்து பழனி மீது ஊற்றினாராம். இதில் வயிறு மற்றும் கைகளில் காயமடைந்த பழனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பழனி கொடுத்த புகாரின் பேரில் மலர்க்கொடியிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!