சென்னை: ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று வணங்கினால் ஏதாவது ஒன்றைப் பறிகொடுக்க நேரிடுவதாக சமூக வலைதளங் களில் வேகமாகத் தகவல்கள் பரவிவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின் தமிழகமே தலைகீழாக மாறிவிட்டது. ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு மாற்றம் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெய லலிதாவின் சமாதிக்குச் சென்று வணங்கும் ஒவ்வொரு தலை வர்களும் ஏதாவது ஒன்றை பறி கொடுப்பதாக சமூக வலைதளங் களில் தகவல் உலா வந்து கொண்டுள்ளது. இதற்கு உதாரணமாக முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வம், திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று தியானம் செய்த பின், எடப்பாடி பழனி சாமியிடம் முதல்வர் பதவியை பறிகொடுத்தார். பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவினரால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஆவணத்தை, ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கினார். அதன்பின் நேராக, பெங்களூரு சிறைக்குச் சென்றார்.
மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி. கோப்புப் படம்