நெல்லை: திருநெல்வேலி மாவட் டத்திலுள்ள ராதாபுரம் தாலுக்கா பகுதியில் செயல்பட்ட வி.வி.மின ரல்ஸ் நிறுவனத்தின் 15 ஆலை களுக்கு 'சீல்' வைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருநெல் வேலி ஆட்சியர் என். கருணா கரன் கூறும்போது, "திருநெல் வேலி மாவட்டத்தின் கரைசுற்று புதூர், நவலடி, புகரி உள்ளிட்ட 15 இடங்களில் செயல்பட்ட வி.வி.மினரல்ஸ் ஆலைகளை 'சீல்' வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "ஒவ்வோர் ஆலையாக தற் போது 'சீல்' வைக்கப்பட்டு வரு கிறது. "நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. "கடந்த 2013ஆம் ஆண்டி லிருந்தே கனிமவள ஆலைகள் செயல்படுவதற்கும் கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. "சீல் வைக்கப்பட்டுள்ள ஆலை களை 24 மணி நேரமும் கண் காணிக்க மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது," என்றார்.
'சீல்' வைத்து முடக்கப்பட்ட ஆலைகளுள் ஒன்று. படம்: தமிழக ஊடகம்