வெளிநாடுகளில் 1 மி. தமிழகப் பெண்கள்

சென்னை: சுமார் 10 லட்சம் தமிழ் பெண்கள் வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரிந்து வரு வது 'புலம் பெயர்ந்த தமிழர்கள்' ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத் தில் 20 லட்சம் குழந்தைகள் தாயில்லாமல் தாத்தா, பாட்டி பரா மரிப்பில் வளர்கின்றனர் அல்லது தந்தையிடம் வளர்கின்றனர். இந்த பத்து லட்சம் பெண்களும் திருமணமானவர்கள் என்றும் அவர்கள் தங்களது கணவன், குழந்தைகள், குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணி யாற்றுவதாகவும் ஆய்வு குறிப்பிடு கிறது.

தமிழகத்திலிருந்து வெளிநாடு களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் குறித்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருதய ராஜன், சாமுவேல் ஆசிர் ராஜ், பெர்னான்ட் டி சாமி ஆகியோர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். தமிழத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 20 ஆயிரம் வீடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழகப் பெண்களில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் 43.9 விழுக்காட்டினர். இரண்டா வதாக, 40.9 விழுக்காட்டினர் நாமக்கலைச் சேர்ந்த பெண்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!