சென்னை: பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் (படம்) உடல்நலக் குறைவால் காலமானார். அவ ருக்கு வயது 86. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத் தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை அசோகமித்திரன் எழுதியுள்ளார். 'அப்பாவின் சிநேகிதர்' சிறுகதைத் தொகுப்புக்காக 1996ல் 'சாகித்ய அகாடமி' விருதை அவர் வென்றார்.
செகந்திராபாத்தில் பிறந்த அசோகமித்திரன் தனது 21வது வயதில் சென்னைக்குக் குடியேறி னார். 1966 முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார். அவரின் இயற்பெயர் ஐ.தியாகராஜன். அதைத் தொடர்ந்து 'அசோகமித்திரன்' என்ற புனைப்பெயரில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி னார். இவருக்கு தமிழ்நாடு அரசு மும்முறை பரிசுகள் வழங்கி கௌரவித்துள்ளது. சாரல், இலக்கியச் சிந்தனை, அக்சரா ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். அசோகமித்தி ரனின் மறைவுக்கு இலக்கியவாதி கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.