அமெரிக்க அணிக்கு முதல் வெற்றி

சான் ஜோஸ்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியை வீழ்த்தி முதன்முறையாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது அமெரிக்க அணி. ஏற்கெனவே கோஸ்டா ரிக்கா, மெக்சிக்கோ அணிகளிடம் தோல் வியைச் சந்தித்த அமெரிக்க அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய நெருக்கடி- யில் இருந்தது. கிளிண்ட் டெம்சி புகுத்திய மூன்று கோல்கள் உட்பட 6 கோல்களைப் புகுத்தி 6-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை அமெரிக்கா வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே முதல் கோலை புகுத்தினார் செபஸ்டியன். முன்னதாக, கிறிஸ்டியன் புலிசிலிக் உதைத்த பந்தை கோலாக விடாமல் தடுத்துவிட்டார் ஹோண்டுராஸ் கோல்காப்பாளர். அதன்பிறகு, அணித் தலைவர் மைக்கல் பிரேட்லி, டெம்சே, புலிசிலிக் ஆகியோரும் தொடர்ந்து கோல்களைப் புகுத்த 6-0 என அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தகுதிச் சுற்றுப் பட்டியலில் கடைசியில் இருந்த அமெரிக்க அணி, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!