தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான கடைசி, நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 300 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்திய அணித்தலைவர் பதிலாக குல்தீப் யாதவும் இஷாந்த் சர்மாவிற்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் சேர்க்கப்பட்டனர். குல்தீப் பிற்கு இதுவே முதல் அனைத்துலக ஆட்டம். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை வார்னர் சந்தித்தார். வார்னர் அடித்த முதல் பந்து 3=வது 'ஸ்லிப்' திசையை நோக்கி பறந்தது. இதை கருண் நாயர் பிடிக்கத் தவறினார். இதனால் இந்தியா முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை இழந்தது. அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்தில் ரென்ஷாவின் தடுப்பை மீறி பந்து 'ஸ்டம்ப்'பைப் பதம் பார்த்தது. ரென்ஷா ஒரே ஒரு ஓட்டமே எடுத்தார். அதன்பின் வார்னருடன் அணித்தலைவர் ஸ்மித் இணைந் ததும் ஆஸி.யின் ஓட்ட விகிதம் ஓவருக்கு 4 என மளமளவென எகிறியது. இருவரும் மதிய உணவு இடைவேளைக்குள் அரை சதம் அடித்தனர்.
அறிமுக ஆட்டத்திலேயே தமது இடதுகை சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலிய வீரர்களைத் திக்குமுக்காடச் செய்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய குல்தீப் யாதவை (இடது) பாராட்டும் சக இந்திய வீரர் உமேஷ் யாதவ். படம்: ஏஎஃப்பி