புக்கிட் தீமா விரைவுச் சாலையில் நேற்று காலை நிகழ்ந்த விபத்தில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி மரணம் அடைந்தார். அதிகாலை 6.29 மணி அளவில் இந்த விபத்து குறித்து போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து உட்லண்டஸ் செல்லும் வழியில் கிராஞ்சி விரைவுச் சாலை நுழைவாயிலுக்குப் பிறகு நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததை மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.
விபத்தின் காரணமாக புக்கிட் தீமா விரைவுச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: வான்பாவ்