பிரிட்டனிலும் தாக்குதல்: விழித்துக்கொள்வோம்

உலகில் நாடாளுமன்ற ஆட்சிமுறையை, மக்களாட்சி முறையைப் பலப்படுத்திய நாடுகளில் மிக முக்கியமான நாடு பிரிட்டன். அந்த நாட்டின் நாடாளுமன்றம் உலக நாடாளுமன்றங்களுக்கு எல்லாம் தாய் என்று வர்ணிக் கப்படுகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் நாடாளுமன்றம் உலக ஜனநாயகத்தின் மூலாதாரத் தூண்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. பல நாடுகள், பல சமயங்கள், பல கலாசாரங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றாகச் சேர்ந்து சுதந்திரம், மக்களாட்சி, பேச்சு சுதந்திரம் எல்லாவற்றுக்கும் உலகம் முழுவதற்கும் கேட்கும்படி ஓங்கி குரல் கொடுத்து வருவது இன்று நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாகவே நடந்துவருகிறது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்டம் புதன்கிழமை நடந்துகொண்டு இருந்தபோது=400 பேருக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூடி இருந்த போது=தனிநபர் ஒருவர் ஒரு வாகனத்தில் வந்து மக்கள் மீது வாகனத்தை மோதி, போலிஸ்காரர் ஒருவரைக் கத்தியால் குத்தி பயங்கரவாதத்தை அரங்கேற்றியது உலகம் முழுவதுமே அதிர்ச்சிப் பேரலையைக் கிளப்பிவிட்டு உள்ளது. அந்தச் சம்பவத்தில் மொத்தம் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயம் அடைந்தனர். அந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதச் சம்பவம். அதை அரங்கேற்றிய காலித் மசூது என்பவருக்கு வயது 52. காலித் திருமணமானவர். அவருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. முன்பு அவர் ஓர் ஆசிரியர். இஸ்லாமிய சமயத் துக்கு மாறியவர். முன்னாள் குற்றவாளி. என்றாலும் அதிகாரிகளின் பயங்கரவாத விசாரணை வலையில் சிக்காதவராகவே அவர் இருந்து வந்தவர் என்பதெல்லாம் இப்போது தெரியவந்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!