சென்னை காவல்துறை ஆணையர் திடீர் மாற்றம்

சென்னை: திமுக அளித்த புகா ரின் காரணமாக சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற் கான உத்தரவை தேர்தல் ஆணை யம் பிறப்பித்துள்ளது. சென்னை காவல்துறையின் புதிய ஆணைய ராக கரன் சின்ஹா நியமிக்கப் பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே, கடந்த பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஜார்ஜ் செயல்படுவதாக புகார் எழுந்தது. அப்போதும் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். எனினும் அதிமுக ஆட்சி அமைந்ததும், அவர் மீண்டும் அதே பதவியில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தலி லும் ஜார்ஜ், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்படுவார் என திமுக பகிரங்கமாகக் குற்றம்சாட்டி யது. எனவே அவரை காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணை யத்தில் திமுக புகார் செய்தது. இப்புகார் குறித்து தேர்தல் ஆணை யம் விசாரணை நடத்தியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!