வைகோ: தமிழகத்தை மத்திய அரசு அறவே புறக்கணிப்பது அநீதி

சென்னை: உலகிற்கே உணவு அளிக்கின்ற உழவர்கள் தலைநக ரில் அரை நிர்வாண பட்டினிப் போராட்டம் நடத்துவதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் அலட் சியப்படுத்தி வருவது தமிழக விவசாயிகள் இடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பது அநீதி என்றும் அவர் சாடியுள்ளார். "தமிழ்நாட்டில் விவசாயம் பொய்த்துப் போனதற்குக் காவிரி யில் தண்ணீர் திறந்துவிடாமல் கர்நாடக மாநிலம் வஞ்சித்தது மட்டும் காரணம் அல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, தமிழ்நாட்டின் உரிமையைப் பாது காக்காமல் பச்சைத் துரோகம் இழைத்த மத்திய அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும். "உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்று கூறிய மத்திய அரசு இதுவரையில் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் தமிழகத்தைப் புறக்கணித்து வரு கிறது," என்று வைகோ கூறியுள் ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!