மலப்புரம்: கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத் தில் தொடக்கப்பள்ளியில் 20 ஆண்டு காலமாக ஆசிரியராக இருக்கும் அப்துல் மாலிக் என்ற இவர், கழுத்தளவு உள்ள தண் ணீரில், இடுப்பில் ஒரு ரப்பர் டியூப்பைக் கட்டிக்கொண்டு தனது சாப்பாட்டு டப்பி, காலணி ஆகிய வற்றைக் கையில் தூக்கிக் கொண்டு அன்றாடம் காலையில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று பாடம் நடத்தி வருகிறார். மாலையிலும் இதேபோலத்தான் இவர் வீட்டிற்குத் திரும்புகிறார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, "பேருந்தில் சென்றால் 12 கி.மீ. சுற்றிச் செல்லவேண்டும். அதற்குள் பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிடும். எனவேதான் நீச்சலடித்து வருகிறேன்.
கேரளாவில் ஆசிரியர் அப்துல் மாலிக் அன்றாடம் நீச்சலடித்து ஆற்றைக் கடந்து சென்று, மாணவர் களுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். படம்: இந்திய ஊடகம்