இனி கவர்ச்சி கிடையாது - ரகுல் பிரீத் சிங்

ரகுல் பிரீத் சிங் 'தடையறத் தாக்க', 'புத்தகம்', 'என்னமோ ஏதோ' ஆகியப் படங்களில் நடித்திருந்தாலும், அவர் எதிர்பார்த்தபடி தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குப் பக்கம் போனார். அங்கு முன்னணி நடிகையானார். ஆனால், இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அவருக்கு இந்தி பட வாய்ப்பும் வந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிப்பதற்கு ரகுல் பிரீத் சிங் மறுத்து வருகிறார். "ஆரம்பத்தில் படங்களில் நான் கவர்ச்சியாக நடித்தது உண்மைதான். அப்போது எனக்கு நடிப்பில் சரியான புரிதல் இல்லை. எப்படியாவது பட வாய்ப்புகளைப் கைப்பற்ற வேண்டும் என்று நினைத்ததால் அப்படி நடித்தேன். இப்போது முன்னணி நடிகையாக இருக்கிறேன். "இனி உடம்பை காட்டி நடித்துதான் இந்த இடத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற நிலை இல்லை. எனவே, நடிப்பு திறமையைக் காட்டும் நடிகையாக இருக்கவே விரும்புகிறேன். அந்தக் கோணத்தில்தான் இப்போது படங் களைத் தேர்வுச் செய்து நடித்து வருகிறேன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!