ஐஸ்வர்யா மாணிக்கவாசகம்
பிறக்கும்போதே எளிதில் உடையக்கூடிய எலும்புகளைக் கொண்டிருந்த முகமது நஜுலாவுக்கு தொடக்கப்பள் ளிக் காலத்தில் ஐந்து முறை கால்கள் முறிந்தன. அப் போதிருந்து சக்கர நாற்காலி யில்தான் அவரால் எங்கும் செல்ல முடிகிறது. பல நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டி இருந்தது. "இந்த சிரமமான காலகட்டத்தை விரைவில் கடந்துவிடலாம்," என்று கலங்கிய கண்களுடன் அவரது தாயார் ஆறுதல் கூறியதை நினைவுகூர்ந்தார் நஜுலா. தொடக்கப்பள்ளிக் காலத் தில் மற்ற மாணவர்கள் துள்ளி குதித்து ஓடும்போது, தன்னால் ஓடியாடி விளையாட முடியவில்லையே என்று அவர் ஏங்கியதுண்டு. காலப்போக் கில் தமது உடல் நிலவரத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி னார் நஜுலா.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களின் பயணத்தை எளிதாக்கும் நோக்கில் 'ஹேப்பி வீல்' எனும் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார் நஜுலா. படம்: டிஎன்பிஎஸ்