ரவீணா சிவகுருநாதன்
கீமோதெரபி போன்ற பெரிய அளவிலான சிகிச்சைகள் இன்றி மரபணுவை மாற்றிச் சீரமைப்பதின் மூலம், சிறுநீரகப் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர் கிளமெண்டி டவுன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை நான்காம் ஆண்டு பயிலும் மகாவைஷ்ணவி காளிமூர்த்தி, ஒன் யூ ஃபங். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழக ஆய்வகத்தில் இவர்கள் இருவரும் ஆராய்ச்சிகளில் ஈடு பட்டனர். ஓராண்டு காலம் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுக்கு கிளமெண்டி டவுன் பள்ளி ஆசிரியர்களும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்களும் மகாவைஷ்ணவியின் குழுவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை உடனுக் குடன் நிவர்த்தி செய்து உதவி யதோடு புதியவற்றைக் கற்றுக் கொள்ள மிகுந்த ஊக்கம் அளித்தனர். கல்வி அமைச்சு, ஏ-ஸ்டார் நிறுவனம், சிங்கப்பூர் அறிவியல் நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட் டில் நடைபெற்ற சிங்கப்பூர் அறி வியல், பொறியியல் கண்காட்சி என்ற தேசியப் போட்டியில் தங்கள் கண்டுபிடிப்பைப் படைத்தனர் மகாவைஷ்ணவி குழுவினர்.
சிங்கப்பூர் அறிவியல், பொறியியல் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களோடு தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் தங்க விருது பெற்ற மகாவைஷ்ணவி காளிமூர்த்தி (இடமிருந்து மூன்றாவது), ஒன் யூ ஃபங் (இடமிருந்து இரண்டாவது). படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்