டாக்கா: பங்ளாதேஷில் சனிக்கிழமை இரு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 6 பேர் உயிரிழந்த தாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். போராளிகள் மறைந் திருக்கும் இடத்திற்கு அருகே அதிரடிப் படை வீரர்கள் மேற்கொண்ட சோதனையின்போது அந்த இடத்தில் இரு குண்டுகள் வெடித்ததாகக் கூறப்பட்டது. பங்ளாதேஷின் முக்கிய விமான நிலையத்திற்கு அருகே உள்ள போலிஸ் சோதனைச் சாவடிக்கு எதிரே வெள்ளிக்கிழமை யன்று வெடிகுண்டுடன் வந்த ஆடவர் வெடித்துச் சிதறினார். அந்த சம்பவம் நடந்த மறுநாள் பங்ளாதேஷின் வடகிழக்குப் பகுதியில் இரு குண்டுகள் வெடித் துள்ளன. அந்த குண்டு வெடிப்பில் காயம் அடைந்த 40 பேரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தாக மருத்துவமனைத் தகல்கள் கூறின.
குண்டு வெடிப்பில் காயமடைந்த ஒருவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார். படம்: ராய்ட்டர்ஸ்