ஹாங்காங்: ஹாங்காங்கின் புதிய தலை வராகவும் முதல் பெண் தலைவ ராகவும் கேரி லாம் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். சீனாவின் ஆதரவு இருந்ததால் கேரி லாம் வெற்றி பெறுவார் என்று ஏற்கெனவே முன்னுரைக்கப் பட்டிருந்தது. மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பதி லாக சீன ஆதரவு வாக்காளர்களால் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்தல் நாளான நேற்று வாக்களிப்பு மையத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக ஆதரவுக் குழுக்கள் இத்தேர்தல் முறையை வெட்கக்கேடானது என்று வர்ணித்துள்ளனர். கேரி லாமின் முக்கிய எதிர்தரப்பு வேட்பாளரான முன்னாள் நிதித்துறை தலைவர் ஜான் சாங், மக்களின் ஆதரவினைப் பெற்ற வேட்பாளராக இருந்ததாக கருத்து கணிப்புகள் முன்னர் தெரி வித்திருந்தன. தேர்தலில் போட்டியிட்ட மூன்றாவது வேட்பாளர் வேலை ஓய்வு பெற்ற நீதிபதி வூ கவோக் ஹிங் ஆவார்.
ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகி கேரி லாம் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது கணவர் மற்றும் மகனுடன் காணப்படுகிறார். கையில் மலர் கொத்துகளுடன் மேடையில் நின்ற அவர் ஹாங்காங் மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். ஹாங்காங்கின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள திருவாட்டி லாம் நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக பாடுபடப்போவதாக உறுதி அளித்தார். படம்: ஏஎஃப்பி