தாக்குதல்: தனியாக செயல்பட்ட காலிட் மசூத்

லண்டன்: லண்டனில் தாக்குதல் நடத்திய காலிட் மசூத், தனியாக செயல்பட்டிருப்ப தாகவும் லண்டன் நகரில் மேலும் தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததற்கான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறை உதவி துணை ஆணையர் நீல் பாசு, "அவர் ஏன் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார் என்பதை நாம் எப்போதுமே தெரிந்து கொள்ள முடியாமல் போவதற்கான சாத்தியக்கூறு இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்றார். நாடாளுமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரை கத்தியால் குத்துவதற்கு முன்பு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் பொதுமக்கள் மீது காரை மோதினார் காலிட் மசூத். இந்தச் சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய காலிட் மசூத் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!