பல்கேரியாவிடம் நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி

உலகக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் ஐரோப்பிய தேர்வுச் சுற்றில் மூன்று முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நெதர் லாந்து பல்கேரியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இத்தோல்வியால் நெதர்லாந்து 'ஏ' பிரிவில் முதல் நிலையில் உள்ள பிரான்சை விட ஆறு புள்ளி கள் பின்தங்கியுள்ளது. "இத்தோல்வி குறித்து நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. நம்பிக்கையுடன் இங்கு வந்தோம். ஆனால் அது கெட்ட கனவாகி விட்டது," என்றார் நெதர்லாந்து குழுவின் கேப்டன் ஆர்யன் ரோபன். ஆட்டத்தின் முதல் 20 நிமிடங் களிலேயே பல்கேரியா இரண்டு கோல்களைப் போட்டு நெதர்லாந் தைத் திக்குமுக்காட வைத்தது. பல்கேரியாவின் வெற்றி வாய்ப்பை முறியடிக்க நெதர்லாந்து பல்வேறு கோல் போடும் முயற்சி களைச் சரமாரியாகத் தொடுத் தது. ஆனால், பல்கேரியாவின் கோல் காப்பாளர் நிக்கோலாய் மெ ஹெலோய் அரணாக இருந்து அனைத்து வாய்ப்புகளையும் தடுத்து நிறுத்தினார்.

பல்கேரியாவின் ஜோர்ஜி கொஸ்டடினோவை (இடக்கோடி) கடந்து பந்தைக் கொண்டு செல்ல முயல்கிறார் நெதர்லாந்து குழுவின் கேப்டன் ஆர்யன் ரோபன் (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!