கேரளா: லஞ்சம் வாங்கினால் அதிகாரிகள் உடனடி பணி நீக்கம்

திருவனந்தபுரம்: லஞ்சம் வாங்குவது, ஊழலில் ஈடுபடுவது நிரூபணமானால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவர் என கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள உள்துறை அமைச்சர் ஜலீல், அரசுத் துறைகளில் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். "மக்களுக்கு இலவச சேவை செய்வதாக அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் கருதுகின்றனர். ஆனால், மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில் சம்பளம் பெறுபவர்கள்தான் அவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்," என்றார் ஜலீல்.

ரயில் நிலையங்களில் 'டிஜிட்டல்' பரிவர்த்தனை நாட்டு மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தற்போது முக்கிய ரயில் நிலையங்களில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் முதல் விஜயவாடா, திருப்பதி, காக்கிநாடா, குண்டூர் ரயில் நிலையங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!