சசிகுமாருக்கு தங்கையான ஐஸ்வர்யா

சசிகுமார் ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் படம் 'கொடிவீரன்'. முத்தையா இயக்கும் இப்படத்தில், சசிகுமாரின் தங்கையாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தங்கையாக நடிப்பதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறாராம். "நான் எப்போதுமே ஒரு படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் நாயகன் யார், எத்தனை நாயகிகள் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. கதையில் எனது பங்கு என்ன என்பதை மட்டும்தான் கவனிப்பேன். "அந்த வகையில் 'கொடிவீரன்' படத்தில் எனக்கு தங்கை வேடம் என்றாலும் அது அழுத்தமான வேடம். கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். 'காக்காமுட்டை'யில் எனது அம்மா வேடத்திற்கு கிடைத்தது போலவே இப்படத்துக்கும் பாராட்டுகள் கிடைக்கும், என்னைப் பற்றி பேச வைக்கும் என நம்புகிறேன். எனவே சசிகுமாருக்கு தங்கையானதில் மகிழ்ச்சிதான்," என்கிறார் ஐஸ்வர்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!