‘தமிழ்மொழி விழாவில் கலந்துகொள்க’

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் மாணவர் விடுதியில் தங்கி பயிலும் அ.ரு. சுப்பு அடைக் கலன், தெம்பனிஸில் உள்ள வீட் டிற்கு ஒவ்வொரு வார இறுதியிலும் சென்று குடும்பத்தினர் நண்பர்களு டன் நேரத்தைக் கழிப்பார். மின்னணுவியல் பொறியியல் துறையில் பயின்று வரும் இந்த 22 வயது இளையர், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் தமிழ்மொழி விழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த லிட்டில் இந்தியாவின் ரேஸ் கோர்ஸ் ரோட்டுக்கு நேற்று உற்சாகத்துடன் வந்தார். "ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் தமிழ்மொழி விழாவில் பங்கேற்பதுடன் அதன் முன்னேற் பாட்டு நிகழ்ச்சிகளில் பங்குகொள் வது நிறைவளிக்கிறது," என்ற சுப்பு, சக நண்பர்களுடன் ரேஸ் கோர்ஸ் ரோடு, சந்தர் ரோடு, கிளாங் ரோடு ஆகிய சாலைகளை விழா தொடர்பான பிரசுரங்களுடன் நேற்று வலம் வந்தனர்.

தமிழ்மொழி விழா உணர்வை ஏற்படுத்த பல அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் லிட்டில் இந்தியாவில் நேற்று கூடினர். அவர்களில் (இடக்கோடி) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குமாரி ரோ‌ஷினி, அ.ரு. சுப்பு அடைக்கலன், குடும்பத்துடன் வந்த திருவாட்டி அம்சா (சக்கர நாற்காலியில்) ஆகியோரும் அடங்குவர். படம்: ஹஃபீஸ் ஷாரிஃப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!