தர்மசாலா: இந்தியா- ஆஸ்தி ரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நெருங்கியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் கடந்த சனிக் கிழமை தொடங்கியது. முதலில் பந்தடித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. அந்த அணியின் தலைவர் ஸ்மித் சதம் (111) அடித்தார். இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர்.
பந்தைப் பிடித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஓ கீஃபின் (வலது) விக்கெட்டைச் சாய்க்கும் இந்தியாவின் சேத்தேஸ்வர் புஜாரா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்