வலுவான நிலையில் இங்கிலாந்துக் குழு

லண்டன்: இங்கிலாந்தும் ஜெர்மனியும் தத்தம் ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் காற்பந்து உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் தங்களது வாய்ப்புகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வரு கின்றன. அவற்றில் நேற்று பின்னிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணி லித்துவேனியா அணியை 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இங்கி லாந்து அணியில் இடம்பெற்றுள்ள 34 வயது ஜெர்மெய்ன் டிஃபோ இங்கிலாந்தின் முதல் கோலைப் புகுத்தினார். அது அவர் இங்கி லாந்துக்காகப் போட்ட 20வது கோலாகும். மாற்று ஆட்டக்கார ராகக் களம் இறங்கிய ஜேமி வார்டி இங்கிலாந்தின் இரண்டாவது கோலைப் போட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!