போராடுவதில் தமிழக மக்கள் முதலிடம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கை யிலான போராட்டங்களை நடத்தும் மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 20,450 போராட் டங்கள் நடந்தன. முந்தைய ஆண்டை ஒப்புநோக்கையில் இது 500 குறைவுதான் என்றாலும், இதற்கு அதிகமாக வேறு எந்த மாநிலத்திலும் போராட்டங்கள் நடைபெறவில்லை. பஞ்சாப் (13,089), உத்தரகண்ட் (10,477), டெல்லி (10,039) ஆகிய மாநிலங்கள் அடுத்த நிலைகளைப் பிடித்தன. தமிழகத்தில் 2015ல் அதிகபட்ச மாக அரசியல் கட்சிகள் 8.312 போராட்டங்களை நடத்தின. அதற்கு அடுத்தபடியாக அரசாங்க ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஆகியோர் அதிக எண்ணிக்கை யில் போராட்டங்களை நடத்தினர்.

சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, போக்குவரத்து, குடிநீர், ரேசன் பொருட்கள் போன்ற அடிப்படை சேவைகளில் அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கா ததே இத்தகைய போராட்டங் களுக்கான அடிப்படைக் கார ணங்களாகச் சொல்லப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!