தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தமிழகம்

தமிழ்நாட்டிலுள்ள அணைகளின் நீர்மட்டம் படுபாதாளத்திற்கு இறங்கியுள்ளதால் வரும் கோடை காலத்தில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழகத்தின் முக்கிய 89 அணைகளில் இருக்கும் ஒட்டு மொத்த கொள்ளளவில் இப் போது 11% மட்டுமே நீர் இருக் கிறது. முந்தைய ஆண்டுகளில் மார்ச் மாதத்தின்போது இந்த அளவு 40 விழுக்காடாக இருந்து வந்துள்ளது. அந்த அணைகளில் இப் போது 26 டிஎம்சி, அதாவது 26 பில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பதாகப் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

"முந்தைய ஆண்டுகளின் மார்ச் மாதத்தில், அணைகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 91 டிஎம்சிக்கும் கூடுதலாக இருந்து வந்துள்ளது. இவ்வாண்டு நீர் மட்டம் கடுமையாகச் சரிந்து விட்டது," என்று ஓர் அதிகாரி கூறினார். 921 மில்லிமீட்டர் என்ற வழக்கமான மழையளவைக் காட் டிலும் தமிழகத்தில் 40% குறை வாக மழை பெய்திருப்பதாக வேளாண்மைத் துறை இயக்குநர் குறிப்பிட்டார். "வடகிழக்குப் பருவமழை காலத்தின்போது வழக்கமாக 440 மி.மீ. மழை பெய்யும். ஆனால் கடந்த பருவத்தில் தமிழகத்தில் 168.3 மி.மீ. மழை தான் பெய்தது. இதனால் 21 மாவட்டங்கள் கடும் தண்ணீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டுள் ளன," என்று தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணை யரும் முதன்மைச் செயலருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!