இந்தியரின் உயிர்காக்க முயன்ற அமெரிக்கருக்கு $100,000 பரிசு

அமெரிக்காவில் இனவெறுப்பு காரணமாக கடந்த மாதம் இரு இந்தியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது அதைத் தடுக்க முயன்று குண்டடிபட்ட இயன் கிரிலாட், 24, என்ற அமெரிக்கரின் துணிச்சலைப் பாராட்டும் வகையில் அவருக்கு 100,000 அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்பட்டது. கேன்சஸ் மாநிலத்தில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் நிகழ்ந்த அந்தச் சம்பவத்தில் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா என்ற ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மென்பொறியாளார் பலியானார். அவருடைய நண்பர் அலோக் மதசானியும் இச்சம்பவத்தில் காயமடைந்தார். இந்நிலையில், ஹூஸ்டனைச் சேர்ந்த 'இந்தியா ஹவுஸ் ஹூஸ்டன்' எனும் லாப நோக்கமற்ற இந்திய-அமெரிக்கச் சமூகம் கிரிலாட்டின் செயலை மெச்சி அவருக்கு நூறாயிரம் அமெரிக்க டாலரைப் பரிசாக அளித்தது.

தன்னுயிரைப் பாராது இன்னொருவரின் உயிரைக் காக்கத் துணிந்த இயன் கிரிலாட் (இடமிருந்து 2வது) சொந்த வீடு வாங்குவதற்காக நூறாயிரம் அமெரிக்க டாலரை வழங்கியது 'இந்தியா ஹவுஸ் ஹூஸ்டன்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பு. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!