ஜப்பானில் பனிச்சரிவு: 8 பேர் பலி

தோக்கியோ: ஜப்பானின் நாசு பகுதியில் பள்ளி மாணவர்கள் மலையேறும் பயிற்சியில் ஈடு பட்டிருந்தபோது அங்கு திடீரென்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் கூறின. "ஜப்பான் தலைநகர் தோக்கியோ விலிருந்து 190 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாசு என்ற பகுதியில் ஏழு உயர்நிலைப் பள்ளி களைச் சேர்ந்த 60 மாணவர்கள் நேற்று மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்" என்று ஜப்பானின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித் துள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 70 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. பனிச்சரிவில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும் அவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

பனிச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களில் ஒருவரை தீயணைப்பாளர்கள் காப்பாற்றி வெளியில் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவ குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் தயாராக உள்ளனர். அப்பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!