மாஸ்கோ: ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை அந் நாட்டுப் போலிசார் கைது செய் துள்ளனர். மாஸ்கோவில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது அவர் கைது செய் யப்பட்டார். ரஷ்ய அதிபர் புட்டினை கடுமையாக விமர் சித்து வந்தவர்களில் அலெக்ஸி நவால்னியும் ஒருவர். ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மட்வியேடெஃப் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் பதவி விலகக் கோரி ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மாஸ்கோவிலும் ரஷ்யாவின் மற்ற இடங்களிலும் நடந்த ஆர்பாட்டங்களிலும் பேரணிகளிலும் ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர்.
மாஸ்கோவில் நடந்த ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியை போலிசார் கைது செய்தனர். படம்: ஏஎஃப்பி