சுதாஸகி ராமன்
வடமேற்கு வட்டாரத்தில் வசிக்கும் சுமார் 190 வசதி குறைந்த மாண வர்கள் பொறுப்புணர்வு, சுய ஊக்குவிப்பு, பொது இடங்களில் பேசும் திறன்கள் போன்ற வாழ் வியல் திறன்களைக் கற்க வட மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் வழிவகுத்தது. நிதி நெருக்கடி உள்ள மாண வர்கள் பின்தங்கிவிடாமல் அவர் களுக்கும் சமமான வாய்ப்புகளை அளிப்பதே இத்திட்டத்தின் நோக் கம். இந்த மன்றம், பொதுமக்களால் திரட்டப்பட்ட வடமேற்கு மாணவர் ஆதரவு நிதியைப் பயன்டுத்தி இத் திட்டத்தை நடத்தி வருகிறது. பொது இடங்களில் பேசும் திறன்களைக் கற்றுக்கொண்டு மாணவர்கள் தன்னம்பிக்கையை யும் சுயமரியாதையையும் வளர்த் துக்கொண்டனர். மற்றவர்களு டன் பேசும் திறமையை வளர்த் துக்கொண்ட மாணவர்கள், துணிச்சலுடன் மேடையேறி பேச வும் கற்றனர். நேர நிர்வாகம், இலக்குகளை நிர்ணயித்தல் போன்றவற்றையும் சமூக சூழலில் கடைப்பிடிக்கவேண்டிய நல்ல பழக்கவழக்கங்களைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொண்டனர்.
வாழ்வியல் திறன் கற்றல் திட்டத்தை வெற்றிகரமாக முடித்த 10 வயது கிருஷ்ண வேணியுடன் அவரது தாயார் திருமதி கவிதா. படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்