டேவிட் ஜோசப் ஜான், 62, என்ற ஸ்டால்கடைக்காரர், 2015 நவம்பர் 13ஆம் தேதி மாலையில் கேன்டோன் மெண்ட் ரோட்டை நோக்கி ஊட்ரம் ரோட்டில் நான்காவது தடத்தில் ஒரு வேனை ஓட்டிச் சென்றார். அவர் முறையாக சாலையைக் கவனித்து ஓட்ட தவறிவிட்டார். அதனால் வோங் ஃபூக் ஹின், 79, என்ற முதியவர் மீது வாகனம் மோதி விட்டது. 10 நாட்கள் கழித்து அந்த முதியவர் மரணம் அடைந்துவிட்டார். அலட்சியமாக வாகனத்தை ஓட்டி முதியவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டதற்காக நேற்று டேவிட்டுக்கு கூடினபட்சமாக $10,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு வாகனத்தை ஓட்டக்கூடாது என்று அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
அபராதமும் தடையும் விதிக்கப்பட்ட டேவிட் ஜோசப் ஜான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்