புலிப் போராளி திலீபனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் 'மாவீரன் திலீபன்' படத்தின் இயக்குநர் ஆனந்தமூர்த்தி, தற்போது இயக்கும் புதிய ஆவணப்படம் 'சினம்'. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தன்ஷிகா. 'மாவீரன் திலீபன்' படம் முழுமை அடைந்துள்ள நிலையில், சில சிக்கல்களின் காரணமாக திரைக்கு வரவில்லை என்று கூறும் ஆன்ந்தமூர்த்தி தான் இயக்கும் இந்த ஆவணப் படம் குறித்த சுவாரசிய தகவல்களை அண்மைய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒவ்வொரு நாளும் சொல்ல முடியாத அளவுக்கு அதிகமாகிக்கொண்டே போகிறது. நம் வீட்டில் உள்ள பெண்களுக்கும் இதுபோன்று ஏதாவது நடந்து விடுமோ என்று மனம் பதறுகிறது. இதுதான் இந்தக் கதையைப் படமாக எடுக்கக் காரணம். படம் முழுவதும் ஒருவர் மட்டுமே பேசும் 'மோனோலாக்' வகை குறும்படம் இது.
"கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவர் தன் கதையை ஆவணப் படமாக எடுக்க விரும்புகிறார். அதற்காக ஆவணப்பட இயக்குநர் ஒருவரை அணுகி, தன் உண்மைக் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்று கூறி அதற்கான வழிமுறைகளைப் பற்றி கேட்கிறார். தன்னைத் தன் தந்தைதான் இத்தொழிலில் ஈடுபட வைத்தார் என்று கூறும் அந்த பாலியல் தொழிலாளியின் வாழ்க்கை அனுபவம் தான் 'சினம்' ஆவணப்படம்.
தன்ஷிகா குறித்து?
"இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க நன்றாக தமிழ் பேசும் நடிகை தேவைப்பட்டார். தொடக்கத்திலேயே தன்ஷிகாதான் என் மனதில் தோன்றினார். இப்படத்தின் திரைக்கதையை தன்ஷிகாவிடம் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்தவுடன் நிச்சயம் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார்.