சிம்புவுக்கு ஜோடியான நீது சந்திரா

விஷால் பட நாயகி ஒருவர் சிம்பு படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்புகேற்றவாறு மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார். அவற்றுள் 'மதுர மைக்கேல்', 'அஸ்வின் தாத்தா' ஆகிய இரண்டு தோற்றங்கள் பற்றிய செய்திகளும் முன்னோட்ட காட்சிகளும் வெளிவந்துவிட்டன. அதேபோல் மதுர மைக்கேலுக்கு ஸ்ரேயாவும், அஸ்வின் தாத்தாவுக்கு தமன்னாவும் ஜோடியாக நடிப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மூன்றாவது தோற்றம் எப்படி இருக்கும், யார் ஜோடி என்பது ரகசியமாக இருந்தது. தற்போது அந்த மூன்றாவது கதாநாயகி யார்? என்பதற்கு விடை தெரிந்துள்ளது. விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை', மாதவன் நடித்த 'யாவரும் நலம்', ஜெயம் ரவி நடித்த 'ஆதிபகவன்' ஆகிய படங்களில் நடித்த நீது சந்திராதான் சிம்பு படத்தின் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம். நீது சந்திரா நடிப்பில் அண்மையில் 'வைகை எக்ஸ்பிரஸ்' வெளியாகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!