பொய்யான புகார் கொடுத்த பெண் மீது போலிஸ் விசாரணை

தான் வழிப்பறி திருட்டுக்கு ஆளானதாக போலிசாரிடம் பொய்ப் புகார் கொடுத்த 39 வயது பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 23ஆம் தேதியன்று தான் பிடோக் சென்ட்ரல், புளோக் 214ன் கீழ் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, தமது கைப்பையை யாரோ ஒருவன் பறித்துச் சென்றுவிட் டான் என்று அந்த மாது போலிசில் புகார் கொடுத்தார். தமது பையில் ரொக்கம், தனிப்பட்ட ஆவணங்கள் ஆகி யவை இருந்தன என்று அவர் புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது புகார் தொடர்பான புலனாய்வில் அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் அளித்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள், அவர் பொய்ப் புகார் கொடுத்தி ருக்கிறார் என்றும் வழிப்பறித் திருட்டுக்கு அவர் ஆளாக வில்லை என்பதையும் உறுதிப்படுத்தினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!