புருணை அரசின் மதிப்புமிக்க விருது பெற்றார்

போலிஸ் ஆணையாளர் ஹுங் வீ டெக் சிங்கப்பூர் போலிஸ் படையின் ஆணையாளர் ஹுங் வீ டெக்குக்கு புருணை அரசாங்கத்தின் மதிப்பு மிக்க விருது அளிக்கப்பட்டு உள்ளது. புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவானில் உள்ள நுருல் இமான் அரண்மனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சடங்கில் புருணை பிரதமர் சுல்தான் ஹச னல் போல்கியா திரு ஹுங்குக்கு விருது அளித்து சிறப்பித்தார். 54 வயதாகும் திரு ஹுங்குக்கு வழங்கப்பட்டுள்ள இவ்விருது சிங்கப்பூர் போலிஸ் படைக்கும் அரச புருணை போலிஸ் படைக்கும் இடையே உள்ள எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்கும் முயற்சி யில் நிலவும் அற்புத உறவையும் அணுக்க ஒத்துழைப்பையும் பிரதி பலிக்கிறது என்று தெரிவிக்கப்பட் டது. வெளிநாட்டு போலிஸ் படை யின் தலைவர்களுக்கு வழங்கப் படும் புருணை அரசின் உயரிய விருதை சிங்கப்பூர் போலிஸ் படை யின் சார்பில் திரு ஹுங் முதல் முறையாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புருணையின் பிரதமர் சுல்தான் ஹசனல் போல்கியா (இடது), புருணை அரசின் விருதை சிங்கப்பூர் போலிஸ் படையின் ஆணையாளர் ஹுங் வீ டெக்கின் (நடுவில்) உடையில் பொருத்துகிறார். படம்: சிங்கப்பூர் போலிஸ் படை

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!