கள்ளக்குடியேறிக்கு உதவிய மூவருக்கு சிறை

அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் சிங்கப்பூரில் தங்கியிருந்த பங்ளாதேஷ் நாட்டவர் ஒருவரை யாருக்கும் தெரியாமல் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு, மாட்டிக் கொண்ட ஆட வர் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று மலேசியரான 26 வயது சீ தியன் ஹாவ், அனு மதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் சிங்கப்பூரில் தங்கியிருந்த 32 வயது முகம் மது இஸ்லாம் ஹரிஸ் மத்பாரை மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரின் முன் இருக் கைக்குப் பின் உள்ள தரையில் படுக்கச் சொல்லி மறைத்து வைத்தார்.

அதன் பிறகு உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்றபோது, குடிநுழைவு சோதனைச்சாவடி அதிகாரிகளால் சோதிக்கப்பட்டபோது பிடிபட்டார். சீயும் இஸ்லாமும் கைதான பிறகு அவர்கள் இருவரும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட னர். அப்போது இஸ்லாமை சிங்கப் பூரை விட்டு வெளியேற்றும் முயற் சியில் வேறு இருவரும் சம்பந்தப் பட்டிருந்தது தெரிய வந்தது. அதேநாளில், 36 வயது மலேசியரான முகம்மது ஹனிஃபா சவுல் மெட், சிங்கப்பூரரான 61 வயது ஜுமாலி யூசோஃப் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அனுமதிக்கப் பட்ட காலத் துக்கு மேல் சிங்கப்பூரில் தங்கியிருந்த பங்ளாதே‌ஷிய ரான முகம்மது இஸ்லாம், மலேசியாவில் பதிவு செய்யப் பட்ட காரின் பின்னிருக்கை யில் ஒளிந்து இருப்பது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கண்டுபிடிக்கப் பட்டது. படம்: குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!