லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் திலிருந்து பிரிட்டன் வெளியேறு வதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் பிரிட்டன் வெளியேற்றம் குறித்த பேச்சினை பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே இன்று தொடங்கு கிறார். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் களுடன் திருவாட்டி தெரேசா மே நடத்தவுள்ள இந்தப் பேச்சு வார்த்தை சிக்கலை மேலும் மோசமாக்கக் கூடியதாக மாற லாம் என்று அயர்லாந்து பிரதமர் என்டா கென்னி கூறியுள்ளார். "இந்தப் பேச்சு வார்த்தை மிக மிகக் கடினமான தாக இருக்கும்," என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் ஜீன் கிளாட் ஜங்கர் கூறினார்.
சென்ற ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டன் வெளியேற்றம் குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட வாக் கெடுப்பில் பிரிட்டிஷ் வாக்காளர் களில் 52 விழுக்காட்டினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற விருப்பம் தெரிவித்தனர்.