சென்னை: அரசியல் களத்தில் சசிகலாவை எதிர்த்துச் செயல் படும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 84 விழுக்காட்டினர் ஆதரவு தெரி வித்துள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் தற்போ தைய அரசியல் சூழ்நிலை திமுகவுக்கு சாதகமாக உள்ளது எனவும் அக்கணிப்பு தெரி விக்கிறது. தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தந்தி தொலைக்காட்சியில் தமிழக அரசியல் நிலவரங்கள் தொடர் பில் அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன் முடிவுகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளன. தமிழகத்தின் நடப்பு அரசி யல் சூழ்நிலை திமுகவுக்கு சாதகமாக உள்ளதாக பலரும் கூறி உள்ளனர். அந்த வகையில் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற வர்களில் சுமார் 61 விழுக்காட்டி னரின் ஆதரவு திமுகவுக்கு கிடைத்துள்ளது. பன்னீர்செல்வம் அணிக்கு 26 விழுக்காட்டினர் ஆதரவும், பாஜகவுக்கு 9% ஆதரவும், இதர கட்சிகளுக்கு 4% ஆதரவும் உள்ளது.