கோவை: 4 ஆயிரம் லாரிகள் இயங்காது என அறிவிப்பு

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோவை லாரி உரிமையாளர் கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று கோவையில் நான்காயிரம் லாரிகள் இயங்காது. இதுகுறித்து செய்தியாளர்களி டம் பேசிய கோவை லாரி உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் கலிய பெருமாள், வேலை நிறுத்தத்துக்கு தொழில் துறையினர், வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். "பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் காலவரம்பில்லா வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தென் மாநில லாரி உரி மையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. "அதற்கு ஆதரவு தெரிவித்து நாங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். வேலை நிறுத் தத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி இழப்பு ஏற்படும். எனினும் பால், மருந்துகளுக்கான சேவை பாதிக்காது," என்று கலியபெருமாள் மேலும் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!