மாதின் நிர்வாணப் படத்தை இணையத்தில் பதிவேற்றுவதாக மிரட்டிய 42 வயது காற்பந்தாட்ட பயிற்றுவிப்பாளரான சம்சுதின் சாலேவுக்கு எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சம்சுதினுக்கும் 34 வயது அனிசா மஜினி இருவருக்கிடை யிலான உறவில் பிரச்சினைகள் தோன்றின. அனிசாவுக்கு பாடம் புகட்ட நினைத்தார் சம்சுதின். நட்புக்கொள்ள விரும்புவதாக அவர் ரிஸ்கி என்ற புனைபெயரில் அனிசாவுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினார். பின்னர் அவரது நிர்வாணப் படங்களை இணையத்தில் பதிவேற்றப் போவதாக மிரட்டினார். ரிஸ்கி தனது முன்னாள் காதலராக இருக்கலாம் என நினைத்த அனிசா அவருடான நட்பைப் புதுப்பிக்க நினைத்தார்.
அனிசா, சம்சுதின் மூலமாக ரிஸ்கிக்கு $4,000 வரை கொடுத்துள்ளார். அனிசா, சம்சுதின் மூலம் தமது வீட்டு வாசலில் வைத்த $3,000ஐ சம்சுதின் தனது வங்கிக் கணக்கில் சேர்த்துக்கொண்டது பின்னர் தெரிய வந்தது. அனிசா சம்சுதின் மனைவி என்றும் அவர் வேறொருவருக்கு நிர்வாணப் படங்களை அனுப்புவதாகச் சந்தேகப்பட்ட சம்சுதின் அவருக்குப் பாடம் புகட்டவே இவ்வாறு நடந்துகொண்டதாகவும் சம்சுதினின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.