ஒரு வார கால இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

இந்திய புத்தாண்டுகளை முன்- னிட்டு லிட்டில் இந்தியாவில் கண் காட்சிகள், கலை நிகழ்ச்சி- கள் போன்றவை ஏற்பாடு செய்யப்- பட்டன. ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இந்த இந்திய கலாசார விழா நடைபெறவுள்ளது. லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபு- டைமைச் சங்கம் ஏழாவது ஆண் டாக பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ள ஒரு வார விழா இந்தியாவின் வெவ்வேறு வட் டாரங்களைச் சேர்ந்த 16 இந்திய அமைப்புகள், சங்கங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அமையும். இந்தியாவின் வெவ்வேறு பகுதி களை பூர்வீகமாகக்கொண்ட வெவ் வேறு மொழிகள் பேசும் சிங்கப்பூரின் இந்திய சமூகங் களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் வித மாக விழா அமையும் என்றார் லிஷாவின் துணை செயலாளர் திரு அருண் அருணாசலம், 30.

"இந்தியர்களின் வேவ்வேறு கலாசாரங்களையும் பாரம் பரியத் தையும் சிங்கப்பூரர்கள் பலர் அறிந்திருப்பதில்லை. குறிப்பாக மாணவர்கள் பரந்துபட்ட இந்திய கலாசாரங்களைப் பற்றிக் கற்றுக் கொள்ள இந்த விழா வழிவகுக்கும்," என்றார் அவர். ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கல்வி அமைச்சரும் (பள்ளிகள்) இரண்டாம் போக்கு வரத்து அமைச்சருமான இங் சீ மெங் அதிகாரபூர்வமாக விழாவை தொடங்கி வைக்க வுள்ளார். கேம்பல் லேனில் தொடக்க- விழா நிகழ்ச்சி நடைபெறும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!