பூமலையில் கற்றல் வனம் பூமலையில் புதிய கற்றல்

வனப்பகுதியை பிரதமர் லீ சியன் லூங் நேற்றுத் திறந்து வைத்தார். ஏறக்குறைய 100 ஆண்டுகள் பழமையான அந்த அடர்ந்த வனப்பகுதி $30 மில்லியன் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 ஹெக்டர் நிலப்பரப்பை கொண்ட அப்- பகுதியில் நன்னீர், தாழ்நில வனங்கள் பாதுகாக்கப்படு கின்- றன. மேலும் உள்ளூர் தாவர இனங்களும் இங்கு பாதுகாக்கப் படுகின்றன. 19ஆம் நூற்றாண்டில் பயிர் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த நிலப்பகுதி, பின்னர் குடி யிருப்புப் பகுதியாக இருந்துள்ளது. தேசிய பூங்கா வாரியம் பழைய வரைபடங்களின் உதவியுடன் இப்பகுதியை கடந்த இரண்டரை ஆண்டுகளாக சீரமைத்தது. நில ஆய்வுகளையும் மேற்கொண்டு, இப்பகுதியின் இயற்கையான மரஞ்செடிகளும் நீர்நிலைகளும் மீண்டும் இங்கு அமைக்கப்பட்டன. தற்போது பூமலையின் யுனெஸ்கோ மரபுடைமை பகுதியைச் சுற்றியுள்ள பகுதியின் ஓர் அங்கமாக இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.

பூமலையின் புதிய கற்றல் வனப்பகுதியில் அமைந்துள்ள நடைபாதையில் மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் லீ சியன் லூங். கற்றல் வனப்பகுதிக்கு அனுமதி இலவசம். காலை 5 மணி முதல் நள்ளிரவு வரை தினமும் இப்பகுதி பொதுமக்களுக்குத் திறந்திருக்கும். எனினும் சில பகுதிகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!