புதுடெல்லி: உள்நாட்டு விமானச் சேவையில் ஜப்பானைப் பின் னுக்கு தள்ளி உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்நிலையில் இச்சேவையை மேலும் விரிவுபடுத் தும் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 500 கிலோ மீட்டருக்கு 2,500 ரூபாய் என்கிற அடிப்படையில் நாடெங்கிலும் 128 புதிய வழித்தடங்களில் விமானச் சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங் களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்மூலம் வரும் செப்டம்பர் மாதம் சேலத்தில் இருந்து சென்னைக்கும் பெங்களூருக்கும் விமானச் சேவைகள் இயக்கப்பட உள்ளன. ஏர் டெக்கான், ஏர் ஒடிசா, அலைன்ஸ் ஏர், ஸ்பைஸ் ஜெட் மற்றும் டர்போ மேகா ஆகிய 5 நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகவும் இத்திட்டத்திற்காக மத்திய அரசு 205 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறினார்.