மோடி வருகையை எதிர்த்து ரயில் நிலையம் மீது தாக்குதல்

புவனேஸ்வர்: பிரதமர் நரேந்திர மோடியின் ஒடிசா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒடிசாவின் ராயகாட் மாவட்டத்தில் உள்ள டொய்காலு ரயில்வே நிலையத்தை நேற்று காலை 30 மாவோயிஸ்டுகள் அடித்து, நொறுக்கி தாக்குதல் நடத்தினர். இரு குண்டுகளையும் வெடிக்கச் செய்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ரயில்வே அதிகாரிகள் கைபேசியாகப் பயன் படுத்தும் இரு 'வாக்கி டாக்கி' களையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இருப்பினும் இந்த தாக்குதலால் ரயில்வே அதிகாரி களோ உள்ளூர் மக்களோ யாரும் காயம் அடைய வில்லை. குண்டு வெடிப்பு காரண மாக ராயகாட் மாவட்டத்தில் உள்ள ரயில் வழித்தடங்களில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. "பிரதமர் மோடி ஒடிசாவுக்கு வரக்கூடாது, வந்தால் நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கும்," என்ற எச்சரிக்கை கடிதங்களை யும் ரயில்வே நிலையத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்திய மாவோயிஸ்டுகள் போராட்டம் நடத்திய இடத்தில் விட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!